மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பயணிகளுக்காக அமைகிறது நூலகம்!
மதுரை மாட்டுத்தவாணி பேருந்துநிலையத்தில் பேருந்துகளுக்காக காத்திருக்கும் பயணிகள், அந்த நேரத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் முதல் முறையாக நூலகம் அமைக்கப்பட உள்ளது.

மதுரை: மதுரை மாட்டுத்தவாணி பேருந்து நிலையத்தில் பேருந்துகளுக்காக காத்திருக்கும் பயணிகள், அந்த நேரத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் முதல் முறையாக நூலகம் அமைக்கப்பட உள்ளது.
தென் தமிழகத்தில் மிகப் பெரிய பேருந்து நிலையமாக மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையத்தை, கடந்த 1999-ம் ஆண்டு மே 25-ம் தேதி அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி திறந்து வைத்தார். இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு 725 அரசு தொலைதூர பேருந்துகளும், நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் தொலைதூர பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
மாநகரின் பிற பகுதிகளுக்ககு 1,300 மாநகரப் பேருந்துகளும் இந்த பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. தூங்கா நகரம் என்ற பெயருக்கு ஏற்றதுபோல், இந்த பேருந்து நிலையத்தில் இருந்து 24 மணி நேரமும் மாநகர பேருந்துகளும், தொலைதூர பேருந்துகளும் ஓய்வின்றி இயக்கப்படுவதால் பேருந்து நிலையத்தில் எந்த நரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்துகளுக்காக காத்திருப்பார்கள்.
What's Your Reaction?