மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் விலங்குகளை வைத்து அறுவை சிகிச்சை பயிற்சி!
மனிதர்களை போலவே உடல் உறுப்புகள் கொண்ட உயிருள்ள விலங்குகளுக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து பயிற்சி பெறுவதற்கான ஆய்வகம், தமிழகத்திலேயே முதன்முறையாக மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ளது.

மதுரை: மனிதர்களை போலவே உடல் உறுப்புகள் கொண்ட உயிருள்ள விலங்குகளுக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து பயிற்சி பெறுவதற்கான ஆய்வகம், தமிழகத்திலேயே முதன்முறையாக மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ளது.
இளம் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் விரைவாக நேரடி அறுவை சிகிச்சை மருத்துவ அனுபவம் பெறுவதற்காக, மனிதர்களை போன்ற உடல் உறுப்புகள் கொண்ட விலங்குகளுக்கு அறுவை சிகிச்சை செய்து பழகுவதற்கான பயிற்சியும், அதற்கான விலங்குகள் ஆய்வகமும் தமிழகத்திலேயே முதன்முறையாக மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகத்தை மருத்துவக்கல்லூரி ‘டீன்’ அருள் சுந்தரேஷ்குமார் தொடங்கி வைத்தார்.
What's Your Reaction?