சர்க்கரை நோய் முதல் உடல் பருமன் வரை: ஆளி விதைகள் தரும் நன்மைகள் என்னென்ன?
சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கும், உடல் பருமன் பிரச்சினை உள்ளவர்களுக்கும் ஆளி விதைகள் (Flax seeds) உகந்தது என்கிறார் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தீபா

சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கும், உடல் பருமன் பிரச்சினை உள்ளவர்களுக்கும் ஆளி விதைகள் (Flax seeds) உகந்தது என்கிறார் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தீபா. இது குறித்து அவர் விவரித்தவை:
“ஆளி விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் உள்ளன. இதில் கால்சியம் உள்ளது. குறிப்பாக, ஒரு கிராம் ஆளி விதைகளில் 17.6 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. இவை மட்டுமின்றி பாஸ்பரஸ், காப்பர், பொட்டாசியம் உள்ளிட்ட பல தாது வகைகள், இருப்புச் சத்து மற்றும் நார்ச்சத்துகளும் உள்ளன.
What's Your Reaction?