அமெரிக்க தாக்குதலில் அணுசக்தி மையங்கள் மோசமாக பாதிப்பு - இழப்பீடு கோரும் ஈரான்!

அண்மையில், அமெரிக்கா நடத்திய தாக்குதலில் தங்கள் நாட்டின் அணுசக்தி மையங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதற்கு உரிய இழப்பீட்டை அமெரிக்கா வழங்க வேண்டும் என்றும், இல்லையென்றால் ஐ.நா-வில் புகார் அளிக்கப்படும் என்றும் ஈரான் கூறியுள்ளது.

Jun 25, 2025 - 21:00
 0  2
அமெரிக்க தாக்குதலில் அணுசக்தி மையங்கள் மோசமாக பாதிப்பு - இழப்பீடு கோரும் ஈரான்!

தெஹ்ரான்: அண்மையில், அமெரிக்கா நடத்திய தாக்குதலில் தங்கள் நாட்டின் அணுசக்தி மையங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதற்கு உரிய இழப்பீட்டை அமெரிக்கா வழங்க வேண்டும் என்றும், இல்லையென்றால் ஐ.நா-வில் புகார் அளிக்கப்படும் என்றும் ஈரான் கூறியுள்ளது.

கடந்த 21-ம் தேதி அன்று இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க படைகள் தாக்குதலில் இறங்கின. அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலில் ஈரானின் முக்கிய அணுசக்தி மையங்களான ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்டவை தாக்கப்பட்டன. இதை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உறுதி செய்திருந்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow