மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலையில் நாளை மாலை மீண்டும் நடை திறப்பு: தயார் நிலையில் சந்நிதானப் பகுதிகள்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜைக்காக நாளை மீண்டும் நடைதிறக்கப்பட உள்ளது. இதற்காக தயார்நிலையில் சந்நிதானப் பகுதிகள் வைக்கப்பட்டுள்ளது. வனப்பாதையில் பக்தர்களை அனுமதிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Dec 29, 2024 - 20:15
 0  4
மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலையில் நாளை மாலை மீண்டும் நடை திறப்பு: தயார் நிலையில் சந்நிதானப் பகுதிகள்

தேனி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜைக்காக நாளை மீண்டும் நடைதிறக்கப்பட உள்ளது. இதற்காக தயார்நிலையில் சந்நிதானப் பகுதிகள் வைக்கப்பட்டுள்ளது. வனப்பாதையில் பக்தர்களை அனுமதிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 26-ம் தேதி மண்டல பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அன்று இரவு நடை சாத்தப்பட்டது. இந்நிலையில் ஜன.14-ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதற்காக நாளை (டிச.30) மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார்நம்பூதிரி நடையைத் திறந்து வைத்து ஆழிக்குண்டத்தில் ஜோதி ஏற்ற உள்ளார். பின்பு விபூதி, பிரசாதம் வழங்கப்படும். அன்று பூஜைகள் எதுவும் இன்றி இரவு 11 மணிக்கு நடை சாத்தப்படும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow