சபரிமலையில் வரும் 30-ம் தேதி நிறைபுத்திரி சிறப்பு வழிபாடு: தரிசன முன்பதிவுகள் தொடங்கின

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 30-ம் தேதி நிறைபுத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. இதற்காக புதிய நெற்கதிர்கள் ஆபரணப்பெட்டியில் வைத்து தலைச்சுமையாக சபரிமலைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த வழிபாட்டுக்காக தற்போது ஆன்லைன் தரிசனம் முன்பதிவுகள் தொடங்கி உள்ளன.

Jul 22, 2025 - 17:25
 0  5
சபரிமலையில் வரும் 30-ம் தேதி நிறைபுத்திரி சிறப்பு வழிபாடு: தரிசன முன்பதிவுகள் தொடங்கின

தேனி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 30-ம் தேதி நிறைபுத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. இதற்காக புதிய நெற்கதிர்கள் ஆபரணப்பெட்டியில் வைத்து தலைச்சுமையாக சபரிமலைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த வழிபாட்டுக்காக தற்போது ஆன்லைன் தரிசனம் முன்பதிவுகள் தொடங்கி உள்ளன.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர பூஜைக்காக கடந்த 16-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. 5 நாள் தொடர் வழிபாட்டுக்குப் பிறகு நேற்று (ஜூலை 21) இரவு நடைசாத்தப்பட்டது. இந்நிலையில் நிறைபுத்திரி தரிசனத்துக்காக வரும் 29-ம் தேதி மாலை நடைதிறக்கப்பட்டு 30-ம் தேதி ஒருநாள் வழிபாடு நடைபெற உள்ளது. இந்நாளில் புதிய நெற்கதிர்கள் ஐயப்பன் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். பின்பு அவை பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow