புதுச்சேரி மாசிமக தீர்த்தவாரி - நூற்றுக்கணக்கான உற்சவமூர்த்திகளை தரிசிக்க குவிந்த மக்கள்!

புதுச்சேரியில் மாசிமக தீர்த்தவாரியையொட்டி நூற்றுக்கணக்கான உற்சவ மூர்த்திகளை தரிசிக்க மக்கள் குவிந்தனர். மக்களுக்கு இடையூறின்றி நகராட்சி பேட்டரி காரில் வந்து பக்தர்களுடன் ஆளுநரும் சாமி தரிசனம் செய்தார். 

Mar 14, 2025 - 16:40
 0  3
புதுச்சேரி மாசிமக தீர்த்தவாரி - நூற்றுக்கணக்கான உற்சவமூர்த்திகளை தரிசிக்க குவிந்த மக்கள்!

புதுச்சேரி: புதுச்சேரியில் மாசிமக தீர்த்தவாரியையொட்டி நூற்றுக்கணக்கான உற்சவ மூர்த்திகளை தரிசிக்க மக்கள் குவிந்தனர். மக்களுக்கு இடையூறின்றி நகராட்சி பேட்டரி காரில் வந்து பக்தர்களுடன் ஆளுநரும் சாமி தரிசனம் செய்தார்.

புதுவை வைத்திக்குப்பம், வீராம்பட்டினம் கடற்கரைகளில் ஆண்டுதோறும் மாசி மக தீர்த்தவாரி சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு மாசி மக தீர்த்தவாரியையொட்டி புதுவையில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை இன்று அறிவிக்கப்பட்டது. இன்று வைத்திக்குப்பம் கடற்கரையில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர், வேதபுரீஸ்வரர், வரதராஜ பெருமாள், கவுசிக பாலசுப்பிரமணியர், காளத்தீஸ்வரர், தீவனுார் பொய்யாமொழி விநாயகர், மயிலம் முருகன், செஞ்சி ரங்கநாதர் உட்பட பல்வேறு கோயில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் எழுந்தருளினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow