மகரம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - மாற்றுப்பாதை, வெற்றி..!

மகரம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - மாற்றுப்பாதை, வெற்றி...!

Dec 27, 2024 - 19:20
 0  10
மகரம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - மாற்றுப்பாதை, வெற்றி..!

மகரம் பிறர் செய்ய முடியாத சவாலான காரியங்களை ஏற்று சாதித்துக் காட்டுவதில் வல்லவர்களான நீங்கள், சிறந்த பேச்சாளர்கள்! உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது இந்தாண்டு பிறப்பதால் தவிர்க்க முடியாத செலவுகளும், பயணங்களும் வரும். உறவினர், நண்பர்களின் வீட்டு விசேஷங்களை நீங்கள் முன்னின்று நடத்த வேண்டிய சூழ்நிலை வரும். உங்கள் குடும்பத்தினரைப் பற்றி மற்றவர்களிடம் குறைத்துப் பேச வேண்டாம். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 17.05.2025 வரை உங்கள் ராசிக்கு 9-ல் கேது நிற்பதால் தந்தைக்கு மருத்துவச் செலவுகளும், அவருடன் வீண் விவாதங்களும் வந்து போகும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து விலகும். உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை வந்து நீங்கும். ஆனால் 3-ம் வீட்டில் ராகு இருப்பதால் துணிச்சல் பிறக்கும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் வரும். திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.அரசால் அனுகூலம் உண்டு. அரசியலில் செல்வாக்கு உயரும். சொத்து சேரும். கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow