தனுசு ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - செல்வாக்கு, பதவி..!
தனுசு ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - செல்வாக்கு, பதவி...!

தனுசு சேமித்து வைப்பதில் தேனீக்களைப்போலவும், செலவழிப்பதில் ஒட்டகத்தைப்போலவும் குணம் கொண்ட நீங்கள், சரியென பட்டதையே செய்வீர்கள்! ஆனால் உங்கள் ராசியிலேயே இந்தாண்டு பிறப்பதால் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் அதிகம் அக்கறை காட்டுவது மிகவும் நல்லது. நீங்களும் மெடிக்ளைம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
புத்தாண்டின் தொடக்கம் முதல் 17.05.2025 வரை உங்கள் ராசிக்கு 10-ல் கேதுவும், 4-ம் வீட்டில் ராகுவும் நீடிப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றங்கள், சம்பள பிரச்சினை, மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். தாயாருக்கு முதுகு தண்டு வடத்தில் வலி, தலை சுற்றல் வந்து செல்லும். வாகனத்தை இயக்கும்போது அலைபேசியில் பேச வேண்டாம். சாலையைக் கடக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
What's Your Reaction?