கும்பம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - தெளிவு, நிஜம்..!
கும்பம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - தெளிவு, நிஜம்...!

கும்பம் எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாது சந்தர்ப்ப சூழ்நிலையை உணர்ந்து சமயோஜித புத்தியுடன் பேசும் நீங்கள் அடங்கி எழுபவர்கள்! உங்கள் ராசிக்கு பதினோராவது வீட்டில் இந்த புத்தாண்டு பிறப்பதால் சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். வி.ஐ.பிகள் மத்தியில் பிரபலமாக பேசப்படுவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். வருங் காலத்துக்காக சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நவீன ரக வாகனம் மற்றும் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள்.
17.05.2025 வரை உங்கள் ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ம் வீட்டில் கேதுவும் நிற்பதால் எதிலும் பிடிப்பற்ற போக்கு, பிறர் மீது நம்பிக்கையின்மை, வீண் விரயம் வந்து செல்லும். சாதாரணமாகப் பேச போய் சண்டையில் முடியும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். பழைய கடன் பிரச்சினை அவ்வப்போது மனதை வாட்டும். 18.05.2025 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள் ராகுவும், 7-ல் கேதுவும் அமர்வதால் எதிலும் ஒருவித பயம், படபடப்பு, ஒற்றைத் தலை வலி, செரிமானக் கோளாறு வந்து செல்லும். வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலிக்கும். யாரை நம்புவது என்கிற மனக் குழப்பத்துக்கு ஆளாவீர்கள். கணவன் - மனைவிக்குள் வரும் சின்ன சின்ன பிரச்சினை களை பெரிதுப்படுத்திக் கொண்டி ருக்காதீர்கள். வீண் சந்தேகத்தை விலக்கி கொள்ளுங்கள். ஈகோவை தவிர்க்கப் பாருங்கள்.
What's Your Reaction?