மீனம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - வேகம், புதிய முயற்சி..!

மீனம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - வேகம், புதிய முயற்சி ...!

Dec 27, 2024 - 19:20
 0  5
மீனம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - வேகம், புதிய முயற்சி..!

மீனம் கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு என்பதை உணர்ந்த நீங்கள், அதிகம் தெரிந்திருந்தும் அலட்டிக் கொள்ள மாட்டீர்கள்! உங்கள் ராசிக்கு 10-வது வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் கடின உழைப்பால் சாதிப்பீர்கள். மனப்போராட்டங்கள் ஓயும். சமயோஜிதமான பேச்சால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த பணம் கைக்கு வரும். பழைய கடனை எவ்வாறு அடைக்கப் போகிறோமோ என்று முழி பிதுங்கி நின்ற நிலை மாறும். இனி அதற்கான வழி வகைகள் கிட்டும். பிள்ளைகளிடம் அவ்வப்போது ஏற்பட்ட கோபநிலை மாறி இனி அனைவரையும் அரவணைத்துப் போவீர்கள். தள்ளிக் கொண்டே போன மகனின் திருமணம் இப்போது கூடி வரும்.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 17.05.2025 வரை ராசிக்கு 7-ல் கேதுவும், உங்கள் ராசிக்குள்ளேயே ராகுவும் நிற்பதால் மூச்சுத் திணறல், அல்சர், ரத்த சோகை வந்து செல்லும். கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து விலகும். மனைவி உணர்ச்சி வசப்பட்டு பேசினால் அதைப் பெரிதுப்படுத்திக் கொண்டு பதிலுக்கு பதில், ஏட்டிக்கு போட்டியாக ஏதாவது சொல்லிக் கொண்டிருக்க வேண் டாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பப்பையில் கட்டி வந்து நீங்கும். 18.05.2025 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசியை விட்டு ராகு விலகி 12-ம் வீட்டிலும், கேது 6-ம் வீட்டிலும் அமர்வதால் மனப் போராட்டங்கள் ஓயும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow