2025 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன் - பொது பலன்கள்
மன உறுதியைத் தர இருக்கும் 2025: ஆங்கிலப் புத்தாண்டு பொது பலன்கள்

2025-ம் ஆண்டு, நிகழும் குரோதி வருடம், மார்கழி மாதம் 17-ம் தேதி புதன்கிழமை சுக்ல பட்சத்து பிரதமை திதி, பூராடம் நட்சத்திரம், வியாகாதம் நாம யோகம், பவம் நாமகரணத்தில் கன்னி லக்னத்தில், சித்தயோகத்தில், நேத்திரம், ஜீவனம் மறைந்திருக்க பஞ்ச பட்சியில் கோழி வலுவிழந்திருக்கும் நேரத்தில் (01.01.2025) பிறக்கிறது. கர்மவினை கிரகம் சனி பகவானின் ஆதிக்கத்தில் இருந்த 2024 (2+0+2+4=8)ம் ஆண்டு பலவிதமான இழப்புகளையும், ஏமாற்றங் களையும், இயற்கை சீற்றங்கள் மற்றும் சாலை விபத்துகளால் உயிரிழப்புகளையும் தந்த தோடு மக்களிடையே வேலையில்லாத் திண்டாட்டத்தையும் தந்து போதை பாதை சென்று வாழ்விழந்த இளைஞர்களையும் அதிகரித்தது.
ஆனால் இனிவரும் 2025-ம் ஆண்டு (2+0+2+5=9) மக்களிடையே சுய ஒழுக்கத்தையும், மனநிம்மதியையும் அள்ளித் தரும். வேலை வாய்ப்பு பெருகும். செவ்வாயின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் சட்டம், ஒழுங்கு சீராகும். காவல் துறை, ராணுவத்தினரின் கை ஓங்கும். தீவிரவாதிகள் ஒடுங்குவர். பல குழப்பங்களில் பிரிந்த சகோதரர்கள் ஒன்று சேர்வர். பூமி விலை உயரும். காடுகள் செழிப்படையும்.
What's Your Reaction?