துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூன் 26 - ஜூலை 02
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூன் 26 - ஜூலை 02

துலாம்: (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை - பஞ்சம ஸ்தானத்தில் சனி, ராகு - களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், குரு - தொழில் ஸ்தானத்தில் புதன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகிறார்கள் | கிரகமாற்றங்கள்: 29.06.2025 அன்று சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் ராசிக்கு மறைந்திருந்தாலும் ராசியை குரு பார்ப்பதால் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். அலைச்சல் இருக்கும். பணவரவும் இருப்பதுடன் பயணங்கள் செல்லவும் நேரலாம்.
What's Your Reaction?