கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூன் 26 - ஜூலை 02

கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூன் 26 - ஜூலை 02

Jun 25, 2025 - 15:50
 0  26
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூன் 26 - ஜூலை 02

கடகம்: (புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - ராசியில் புதன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி, ராகு - தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், குரு என கிரகங்கள் வலம் வருகிறார்கள் | கிரகமாற்றங்கள்: 29.06.2025 அன்று சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் ராசிநாதன் சந்திரன் ராசிக்கு ஆட்சியாக வருகிறார். அயன சயன விரைய ஸ்தானாதிபதி புதன் ராசியில் இருப்பதால் சுப பலன்கள் உண்டாகும். எடுத்த காரியம் தாமதத்திற்கு பிறகு சாதகமான பலன் தரும். ராசியாதிபதி சந்திரன் சஞ்சாரம் மனோதிடத்தைத் தரும். அவசரப்பட்டு வாக்குறுதி கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். தாயாரின் உடல்நிலையில் கவனம் தேவை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow