கன்னி ராசிக்கு சனிப் பெயர்ச்சி எப்படி? - பலன்களும் பரிகாரமும்
கன்னி ராசிக்கு சனிப்பெயர்ச்சி எப்படி?: பலன்களும் பரிகாரமும்

கன்னி: முயற்சியை முதுகெலும்பாக கொண்ட நீங்கள் வெற்றி ஒன்றையே இலக்காக வைத்திருப்பீர்கள். பேச்சில் காரத்தைத் தூவினாலும் உங்கள் இதயத்தில் ஈரம் இருந்துகொண்டே இருக்கும். இதுவரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் அமர்ந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 29.03.2025 முதல் 03.06.2027 வரை உள்ள காலகட்டங்களில் 7-ம் வீட்டில் அமர்வதால் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாகத்தான் இருக்க வேண்டும்.
சனிபகவான் 7-ல் அமர்வதால் குடும்பத்தில் வீண் வாக்கு வாதங்களும், சண்டை சச்சரவுகளும் வந்துபோகும். பிள்ளைகளால் செலவுகளும், அலைச்சலும் வரும். மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். நீங்களும் அயல்நாடு சென்று வருவீர்கள். மகளின் கல்யாணத்தை அலைந்து திரிந்து போராடித்தான் முடிப்பீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் தலைதூக்கும். பிரபலங்கள், வேற்று மொழிக்காரர்கள் உதவுவர்.
What's Your Reaction?