கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 24 - 30

கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 24 - 30

Jul 23, 2025 - 18:00
 0  26
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 24 - 30

கடகம்: (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - ராசியில் சூரியன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ), ராகு - லாப ஸ்தானத்தில் சுக்கிரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன், புதன்(வ), குரு என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் எதிர்ப்புகள் அகலும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். உங்களின் பொருளாதார வலிமை கூடும். அதே வேளையில் பொருட்களின் மீது கவனமும் தேவை. இழப்பு ஏற்படலாம். வாழ்க்கையில் பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். வாழ்க்கை வளம் முன்னேறும். அதே வேளையில் தெய்வ அனுகூலத்துடனும் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். உடன் வேலை செய்வோரின் ஆதரவால் அதனைச் சமாளிப்பீர்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow