புதுச்சேரியில் 4 பொதுத்துறை நிறுவனங்களில் 5 ஆண்டுகளில் ரூ.388 கோடி இழப்பு: தணிக்கைக் குழு அறிக்கை
பாசிக், பாப்ஸ்கோ, பிஆர்டிசி, பிடிடிசி ஆகிய நான்கு பொதுத்துறை நிறுவனங்களில் கடந்த 2017 முதல் 2022 வரை ஐந்து ஆண்டுகளில் ரூ. 388.5 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இந்திய தணிக்கைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி: பாசிக், பாப்ஸ்கோ, பிஆர்டிசி, பிடிடிசி ஆகிய நான்கு பொதுத்துறை நிறுவனங்களில் கடந்த 2017 முதல் 2022 வரை ஐந்து ஆண்டுகளில் ரூ.388.5 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இந்திய தணிக்கைக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் நிதி நிலை தணிக்கை அறிக்கைகள் தனித்தனியாக இன்று நான்கு சமர்ப்பிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழகம், புதுச்சேரி முதன்மை கணக்காய்வு தலைவர் திருப்பதி வெங்கடசாமி தலைமைச் செயலகத்தில் இன்று மாலை செய்தியாளர்களிடம் கூறியது: ''பாசிக் நிறுவனம் நுண்ணுயிர் உரம், பூச்சிக்கொல்லி, குப்பை உர விஷயங்களை முழுமையாக செயல்படுத்தாத காரணத்தால் ரூ.2.14 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. கடந்த 2017 முதல் 2022 வரை பாசிக் நிறுவனம் அரசு துறைகளுக்கு காய்கறிகளை மொத்த விலைக்கு தொடர்ந்து விநியோகிக்கவில்லை. இதனால் ரூ.9.1 கோடி இழப்பு ஏற்பட்டது. வேளாண் விற்பனைக் கூடங்களை மூடுவதில் ஏற்பட்ட காலதாமத்தால் பாசிக் நிறுவனத்துக்கு ரூ. 22.89 கோடி நஷ்டம் ஏற்பட்டது.
What's Your Reaction?