ஒரேநாளில் பத்திரப் பதிவு மூலம் ரூ.274 கோடி வருவாய்: அமைச்சர் மூர்த்தி தகவல்
ஆவணி மாத சுபமுகூர்த்த நாளான நேற்று முன்தினம் செப்.4-ம் தேதி ஒரேநாளில் பத்திரப்பதிவு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு ரூ.274.41 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

சென்னை: ஆவணி மாத சுபமுகூர்த்த நாளான நேற்று முன்தினம் செப்.4-ம் தேதி ஒரேநாளில் பத்திரப்பதிவு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு ரூ.274.41 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஆவணி மாதம் சுபமுகூர்த்த தினமான நேற்று முன்தினம் செப்.4-ம் தேதி கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்பட்டன. இதன்மூலம், பதிவுத்துறை வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவில் இந்த 2025-26-ம் நிதியாண்டில், ஒரேநாளில் அரசுக்கு ரூ.274.41 கோடி வருவாய் ஈட்டி பதிவுத்துறை புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
What's Your Reaction?