நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து ஒத்திவைப்பு

இந்தியா-இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று  மீண்டும்  தொடங்க இருந்த நிலையில் தொழில்நுட்ப சான்றிதழ் அனுமதி தொடர்பான பிரச்சனைகளால் வேறு தேதிக்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Feb 12, 2025 - 18:40
 0  2
நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து ஒத்திவைப்பு

நாகை: இந்தியா - இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று மீண்டும் தொடங்க இருந்த நிலையில், தொழில்நுட்பச் சான்றிதழ் அனுமதி தொடர்பான பிரச்சினைகளால் வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கை, இந்தியா இருநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வேண்டுகோளை ஏற்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி முதல் சிவகங்கை என்ற பெயரிலான பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டது. நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து, வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறுத்தம் செய்யப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow