பிரம்மோற்சவ விழாவில் 60 டன் மலர்களால் அலங்காரம்: திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தகவல்

திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் பிரம்​மோற்சவ விழா பிரம்​மாண்​ட​மாக நடத்​தப்பட உள்​ளது. 9 நாட்​கள் நடை​பெற உள்ள இந்த விழாவுக்​காக ரூ.3.5 கோடி செல​வில் 60 டன் மலர்​களால் அலங்​காரம் செய்​யப்பட உள்​ளது.

Sep 20, 2025 - 10:50
 0  3
பிரம்மோற்சவ விழாவில் 60 டன் மலர்களால் அலங்காரம்: திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தகவல்

திருமலை: ​திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் பிரம்​மோற்சவ விழா பிரம்​மாண்​ட​மாக நடத்​தப்பட உள்​ளது. 9 நாட்​கள் நடை​பெற உள்ள இந்த விழாவுக்​காக ரூ.3.5 கோடி செல​வில் 60 டன் மலர்​களால் அலங்​காரம் செய்​யப்பட உள்​ளது. திருப்​பதி ஏழு​மலை​யானின் பிரம்​மோற்சவ விழா வரும் 24-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கி, அக்​டோபர் 2-ம் தேதி வரை கோலாகல​மாக நடை​பெற உள்​ளது. இதுதொடர்​பான ஆலோ​சனைக் கூட்​டம் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரிஅனில்​கு​மார் சிங்​கால் தலை​மை​யில் திரு​மலை​யில் நேற்று நடந்​தது.

பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பிரம்​மோற்சவ விழாவுக்​கான அனைத்து ஏற்​பாடு​களும் நிறைவு பெற்​றுள்​ளன. ஆகம சாஸ்​திர விதி​களின்​படி கடந்த செவ்​வாய்க்​கிழமை கோயில் முழு​வதும் சுத்​தம் செய்​யப்​பட்​டது. வாக​னங்​களின் மராமத்து பணி​கள் நிறைவடைந்து உள்​ளன. முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு வரும் 24-ம் தேதி பட்டு வஸ்​திரங்​களை காணிக்​கை​யாக வழங்க உள்​ளார். அன்று மாலை கொடியேற்​றத்​துடன் ஏழு​மலை​யானின் பிரம்​மோற்​சவம் தொடங்​கு​கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow