பாரதியாரின் சரண வரிகளும் பல்லவிதான்!
மகாகவி பாரதியார் எழுதியிருக்கும் `ஜாதீய கீதம் -2 புதிய மொழிபெயர்ப்பு' பாடலின் சரணத்தை, பல்லவி வரிகளாக முதன்மையாக்கி இந்தப் பாடலை உருவாக்கியிருக்கின்றோம்

மகாகவி பாரதியாரின் பிறந்த நாளையொட்டி `அறிவு நீ தருமம் நீ' என்னும் பாடலைப் பாடி யூடியூபில் வெளியிட்டிருக்கிறார் தீபிகா தியாகராஜன். இவர், திரையிசையில் புதிய திருப்புமுனையை உண்டாக்கிய `வாராய் நீ வாராய் போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்' என்னும் பாடலைப் பாடிய திருச்சி லோகநாதனின் பேத்தி. திருச்சி லோகநாதனின் வாரிசுகளில் ஒருவரான டி.எல்.தியாகராஜனின் மகள். இந்தப் பாடலுக்கு இசையமைத்திருக்கும் டி.எல். தியாகராஜனிடம் இந்தப் பாடலின் சிறப்பு குறித்துக் கேட்டோம்:
"மகாகவி பாரதியார் எழுதியிருக்கும் `ஜாதீய கீதம் -2 புதிய மொழிபெயர்ப்பு' பாடலின் சரணத்தை, பல்லவி வரிகளாக முதன்மையாக்கி இந்தப் பாடலை உருவாக்கியிருக்கின்றோம். பாரதியாரின் பாடல்களில் அமைத்திருக்கும் பல்லவியின் வரிகளைப் பலரும் மிகவும் சிலாகித்துப் பேசுவார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை, பாரதியின் பாடல்களின் பல்லவியில் மட்டுமல்ல; சரணத்திலும்கூட அர்த்த அடர்த்தி மிகுதியாக இருக்கும்!
What's Your Reaction?