பான்ஹெம் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ட்-அப் சிங்கம் 2-வது சீசனில் இணைந்த தொழிலதிபர்கள்
ஸ்டார்ட்-அப் சிங்கம் 2-வது சீசன் நிதி திரட்டல் நிகழ்ச்சிக்காக, ஆலோசகராகவும் முதலீட்டாளராகவும் தொழிலதிபர்கள் சிலர் இணைந்துள்ளனர்.

சென்னை: ஸ்டார்ட்-அப் சிங்கம் 2-வது சீசன் நிதி திரட்டல் நிகழ்ச்சிக்காக, ஆலோசகராகவும் முதலீட்டாளராகவும் தொழிலதிபர்கள் சிலர் இணைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் முதல் முறையாக ‘ஸ்டார்ட்-அப் சிங்கம்' என்ற பெயரில் ஸ்டார்ட்-அப் ரியாலிட்டி ஷோவை பான்ஹெம் வென்ச்சர்ஸ் நிறுவனம் நடத்தியது. இது விஜய் தொலைக்காட்சியில் வெளியானது. தொழில்முனைவோர் தங்கள் புதிய தயாரிப்புகள் பற்றி எடுத்துரைத்து நிதி திரட்டவும் சந்தை வாய்ப்பை பெறவும் இந்நிகழ்ச்சி வாய்ப்பாக அமைந்தது.
What's Your Reaction?