பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்காததால் எஸ்சிஓ கூட்டறிக்கையில் கையெழுத்திட இந்தியா மறுப்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) கூட்டறிக்கையில் கையெழுத்திட இந்தியா மறுத்துவிட்டது. இதனால் கூட்டறிக்கை வெளியிடப்படவில்லை.

Jun 27, 2025 - 01:35
 0  17
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்காததால் எஸ்சிஓ கூட்டறிக்கையில் கையெழுத்திட இந்தியா மறுப்பு

குயிங்தவோ: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) கூட்டறிக்கையில் கையெழுத்திட இந்தியா மறுத்துவிட்டது. இதனால் கூட்டறிக்கை வெளியிடப்படவில்லை.

கடந்த 2001-ம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் சீனா, ரஷ்யா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. எஸ்சிஓ அமைப்பின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாடு சீனாவின் குயிங்தவோ நகரில் கடந்த 25, 26-ம் தேதிகளில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow