அமெரிக்காவின் கன்னத்தில் அறைந்தது ஈரான்: அயத்துல்லா கொமேனி ஆவேசம்

‘‘அமெரிக்காவின் கன்னத்தில் ஈரான் அரைந்துள்ளது. எதிரிகள் இனிமேல் அத்துமீறினால் மிக அதிக விலை கொடுக்க நேரிடும்’’ என ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கொமெனி கூறினார்.

Jun 27, 2025 - 01:35
 0  5
அமெரிக்காவின் கன்னத்தில் அறைந்தது ஈரான்: அயத்துல்லா கொமேனி ஆவேசம்

துபாய்: அணு ஆயுத தயாரிப்பை ஈரான் தீவிரப்படுத்துவதாக கூறி அந்நாட்டின் மீது இஸ்ரேல் கடந்த 13-ம் தேதி தாக்குதலை தொடங்கியது. ஈரானின் அணு ஆயுத தளங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் தன் மீது தாக்குதல் நடத்தலாம் என கருதிய ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கொமேனி ரகசிய இடத்தில் பதுங்கினார்.

ஈரான் - இஸ்ரேல் இடையே போர் தீவிரம் அடைந்த நிலையில் கடந்த 22-ம் தேதி அமெரிக்காவின் பி-2 குண்டு வீச்சு விமானங்கள் , ஈரான் அணு ஆயுத தளங்கள் மீது சக்திவாய்ந்த குண்டுகளை போட்டன. அதன்பின் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி போர் நிறுத்தத்தை அறிவித்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow