துருக்கியில் 5.8 ரிக்டரில் நிலநடுக்கம்: அச்சத்தில் வெளியேறியபோது சிறுமி உயிரிழப்பு; 70 பேர் காயம்

துருக்கியில் இன்று அதிகாலை 2.17 மணிக்கு 5.8 ரிக்டரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக நிலவிய அச்சம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறியபோது, 14 வயது சிறுமி உயிரிழந்தார். சுமார் 70 பேர் காயமடைந்தனர்.

Jun 3, 2025 - 17:35
 0  5
துருக்கியில் 5.8 ரிக்டரில் நிலநடுக்கம்: அச்சத்தில் வெளியேறியபோது சிறுமி உயிரிழப்பு; 70 பேர் காயம்

அங்கரா: துருக்கியில் இன்று அதிகாலை 2.17 மணிக்கு 5.8 ரிக்டரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக நிலவிய அச்சம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறியபோது, 14 வயது சிறுமி உயிரிழந்தார். சுமார் 70 பேர் காயமடைந்தனர்.

துருக்கியின் மேற்குப் பகுதியில் மத்திய தரைக்கடலை ஒட்டிய விடுமுறை வாசஸ்தலமான மர்மாரிஸுக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து துருக்கியின் பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மைத் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மத்திய தரைக்கடலில், விடுமுறை வாசஸ்தலமான மர்மாரிஸுக்கு அருகில் அதிகாலை 2:17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. கிரேக்க தீவான ரோட்ஸ் உட்பட அருகில் உள்ள பகுதிகளில் இது உணரப்பட்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow