''இது முழு சமூகத்தின் சாதனை...” - அமைதி நோபல் வென்ற மரியா கொரினா மச்சாடோ விவரிப்பு

''ஓ மை காட். என்னிடம் வார்த்தைகளே இல்லை. நான் ஒரு தனிநபர்தான். இது ஓர் இயக்கம். இது முழு சமூகத்தின் சாதனை'' என அமைதிக்கான நோபல் பரிசு வென்றுள்ள மரியா கொரினா மச்சாடோ தெரிவித்திருப்பது பலரையும் நெகழ்ச்சியடைச் செய்துள்ளது.

Oct 10, 2025 - 19:45
 0  3

2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர தொடர்ந்து போராடிய, வெனிசுலாவின் ‘இரும்புப் பெண்மணி’ என்று அழைக்கப்படும் மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. “2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, வெனிசுலா மக்களுக்கு ஜனநாயக உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காக அயராது போராடி, நாட்டில் சர்வாதிகாரத்தில் இருந்து ஜனநாயகம் மலர குரல் கொடுத்து வரும் மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்படுகிறது.” என ஸ்வீடிஷ் அகாடமி தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow