பழநிக்கு 2 முறை வந்த காந்தியடிகளை நினைவுகூரும் பழமை மாறாத வீடும், தங்கும் விடுதியும்!
1932-ல் அகில இந்திய ஹரிஜன சேவக சங்கம் ஆரம்பிக்கப்பட்டு, காந்தியடிகளின் வழிகாட்டுதலின் பேரில், தாழ்த்தப்பட்ட மக்களுக் கான முன்னேற்றப் பணிகள் நாடு முழுவதும் நடைபெற்று வந்தன

தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் கால்தடம் பட்ட பழநியில் அவர் தங்கியிருந்த வீடும், கூட்டம் நடத்திய விடுதியும், நினைவு சின்னமும் இன்னும் அவரை நினைவு கூறுகின்றன.
1932-ல் அகில இந்திய ஹரிஜன சேவக சங்கம் ஆரம்பிக்கப்பட்டு, காந்தியடிகளின் வழிகாட்டுதலின் பேரில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான முன்னேற்றப் பணிகள் நாடு முழுவதும் நடைபெற்று வந்தன. நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பல முன்னேற்ற திட்டங்களை காந்தியடிகள் வகுத்தார். அத்திட்டங்களில் ஒன்று தான், ஆலய பிரவேசப் (நுழைவு) போராட்டம். ஹரிஜன முன்னேற்ற வேலைகளுக்கு மதுரை அ.வைத்தியநாத ஐயரை காந்தியடிகள் கேட்டுக் கொண்டார். அதையேற்ற வைத்தியநாத ஐயர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான மேம்பாட்டு பணிகளை முன்னெடுத்தார். 1934-ல் ஹரிஜன நிதி திரட்டுவதற்காக காந்தியடிகள் தமிழ்நாடில் பயணம் மேற்கொண்ட போது, முதன் முறையாக ஜனவரி 29ம் தேதி முதன் முறையாக பழநிக்கு வந்தார்.
What's Your Reaction?