பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க கட்டுப்பாடுகள் என்னென்ன?

தைப்பூசவிழாவை முன்னிட்டு பழநிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குபவர்கள், உணவு பாதுகாப்புத் துறையிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் உணவு வழங்கினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும், என திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் கலைவாணி தெரிவித்துள்ளார்.

Jan 22, 2025 - 20:15
 0  4
பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க கட்டுப்பாடுகள் என்னென்ன?

திண்டுக்கல்: தைப்பூசவிழாவை முன்னிட்டு பழநிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குபவர்கள், உணவு பாதுகாப்புத் துறையிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் உணவு வழங்கினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் கலைவாணி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பிப்ரவரி 5-ம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்கள் நடைபெறவுள்ளது. தைப்பூசவிழாவை முன்னிட்டு மதுரை, கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, சிவகங்கை மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பழநி நோக்கி பாதயாத்திரையாக சென்று முருகனை பக்தர்கள் வழிபடுவது வழக்கம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow