'பல்டி' விமர்சனம் | ஆபத்தான ஆடுகளத்தில் கபடியின் கால்கள்!

விளையாட்டு - நிழலுலகம் என்கிற இரண்டு வகைமையை இணைப்பதில் திரைக்கதை வழியாக வெற்றிபெற்றிருக்கும் இயக்குநர், இதை வன்முறைகளின் விளைநிலமாகச் சித்தரித்திருப்பதில் பெரிதும் சறுக்கியிருக்கிறார்.

Sep 29, 2025 - 00:50
 0  3
'பல்டி' விமர்சனம் | ஆபத்தான ஆடுகளத்தில் கபடியின் கால்கள்!

அரசியலும் தாதாயிசமும் உலகம் முழுவதுமே பின்னிப் பிணைத்த பங்காளிகள். கல்வி, மருத்துவம், ரியல் எஸ்டேட் போலவே கந்து வட்டித் தொழில், போதைப்பொருள் கடத்தல் - விநியோகம் இரண்டும் நிழலுலகின் முக்கியமான தொழில் ஏரியாவுக்குள் நுழைந்து நூற்றாண்டு ஆகிவிட்டது. குறிப்பாக மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி, சிட்டா வட்டி, வார வட்டி கணக்கிடப்படும் தண்டல் என வட்டியே குட்டிபோடும் கொடுமையான வழிகளில், வட்டி மாபியாக்களிடம் பணம் வாங்கும் ஏழை, எளிய மக்களைப் பெரும்பாலான வங்கிகள் கண்டுகொள்வதில்லை. மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரில் குறிப்பிட்ட சில நிறுவனங்கள், வட்டி மாபியாக்களை விட மோசமான ஆட்டத்தை ஆடுகிறார்கள். இதனால் அதிக வட்டிக்குக் கடன் வாங்கிய சாமானிய மக்கள், முதலை அடைக்க முடியாமல் வட்டி கட்டியே வாழ்க்கையை முடித்துக்கொண்டு விடுகிறார்கள். அதுவே வட்டியைச் செலுத்த முடியாமல் போனால், வாங்கிய கும்பலிடம் அவர்கள் படும் பாடுகள் அவர்களைத் தற்கொலை வரை இட்டுச்செல்லக்கூடிய துயரங்களால் நிறைந்தவை.

தமிழ் சினிமாவில் கந்து வட்டி மாபியாவை சித்தரித்த படங்கள் வெகுசில வந்துள்ளன என்றாலும் ‘பல்டி’ போல விளையாட்டையும் வட்டி மாபியாவையும் இணைத்த கதைக் களம் இதுவரை வெளியாகவில்லை. இப்படத்தின் சுவாரசியமே இதை ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாகவும் கேங்ஸ்டர் ஆக்‌ஷன் டிராமாவாகவும் கலந்த கலவையின் கச்சிதம்தான்!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow