பறவைகளுக்கு ஏன் பற்கள் இல்லை? | பறப்பதுவே 11

மனிதர்களுக்குப் ‘பல் போனால் சொல் போச்சு’ என்கிறோம். பல் விழுந்துவிட்டால் கடினமான பொருள்களைச் சாப்பிடுவது சிரமம். மாடு வாங்கும்போது எத்தனை பற்கள் இருக்கின்றன என்பதைப் பார்த்துதான் வாங்குவார்கள்.

Feb 12, 2025 - 12:45
 0  3
பறவைகளுக்கு ஏன் பற்கள் இல்லை? | பறப்பதுவே 11

மனிதர்களுக்குப் ‘பல் போனால் சொல் போச்சு’ என்கிறோம். பல் விழுந்துவிட்டால் கடினமான பொருள்களைச் சாப்பிடுவது சிரமம். மாடு வாங்கும்போது எத்தனை பற்கள் இருக்கின்றன என்பதைப் பார்த்துதான் வாங்குவார்கள். உணவை அசைபோட்டு உண்ணக்கூடிய நிலையில் அவை இருக்கின்றனவா என்பதைப் பற்கள் உறுதிசெய்கின்றன.

பறவைகளுக்குப் பற்களே இல்லை. ஆனால், எப்படிச் சாப்பிடுகின்றன? பறவைகள் தங்கள் செரிமானத்திற்காக உறுதியான அரவைப் பையைக் கொண்டுள்ளன. உணவை விழுங்கும்போது சிறு கற்களையும் பறவைகள் விழுங்கிவிடும். அந்தக் கற்கள் அரவைப் பையில் சேர்ந்து, கடினமான கொட்டை போன்ற உணவுப் பொருள்களை அரைத்துச் செரிக்க உதவுகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow