நட்புக்கு மேலே, காதலுக்கு கீழே... அதென்ன சிச்சுவேஷன்ஷிப்? - காதலர் தினம் ஸ்பெஷல்
‘லவ் ஆச்சு நட்பில்லையே... நட்பாச்சு லவ் இல்லையே’ - 2000ஆம் ஆண்டுகளின் இறுதியில் பட்டித்தொட்டி எங்கும் ரிங்டோனாக, காலர்-டியூனாக சக்கைப்போடு போட்ட ‘ஜூன் போனால் ஜூலை காற்றே’ என்கிற பாடலின் வரிகள் இவை.

‘லவ் ஆச்சு நட்பில்லையே... நட்பாச்சு லவ் இல்லையே’ - 2000ஆம் ஆண்டுகளின் இறுதியில் பட்டித்தொட்டி எங்கும் ரிங்டோனாக, காலர்-டியூனாக சக்கைப்போடு போட்ட ‘ஜூன் போனால் ஜூலை காற்றே’ என்கிற பாடலின் வரிகள் இவை. ‘ஆட்டோகிராஃப்’, ‘பிரியமான தோழி’ போன்று ஆண்-பெண் நட்பு உறவைக் கொண்டாடியத் தமிழ்ப் படங்கள் சில உள்ளன.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தப் படங்களில் ஆண் பெண்ணுக்கு இடையேயான நட்பு, காதலாக மாறாது. ‘நட்பு வேற, காதல் வேற’ எனப் பிரித்துப் பார்த்து நட்பில் மரியாதை, அன்பு, உரிமை கலந்தும்; காதலில் தயக்கம், பாசம், ஸ்பரிசம் கலந்தும் இருந்ததுதான் வழக்கம். அதையும் தாண்டி 90களில் நட்பே காதலான கதைகளையும் பார்த்திருப்போம். இதன் புதிய பரிமாணம்தான் சிச்சுவேஷன்ஷிப் (situationship) என்கிறார்கள் 2கே கிட்ஸ்.
What's Your Reaction?