பறக்க ஆசையா? | இதோ வேலை!

ஆங்கிலம் சரளமாக அறிந்திருக்க வேண்டும். ஆணாக இருந்தால் குறைந்தபட்ச உயரம் 163.5 செ.மீ., பெண்ணாக இருந்தால் குறைந்தபட்ச உயரம் 162.5 செ.மீ., இருக்க வேண்டும். கண் பார்வை தெளிவாக இருக்க வேண்டும்.

Jan 22, 2025 - 12:40
 0  4
பறக்க ஆசையா? | இதோ வேலை!

சாகச உணர்வு கொண்ட இளம் பருவத்தினர் வருங்காலத்தில் தாங்கள் ஒரு விமானியாக வேண்டும் என்று தீர்மானிப்பதுண்டு. ‘பைலட்’ பணியில் நிறைய சம்பாதிக்கலாம் என்கிற காரணத்துக்காக அல்லது பல நாடுகளுக்குப் பயணிக்க முடியும் என்பதற்காக விமானி ஆகும் கனவைச் சிலர் வளர்த்துக் கொள்வதுண்டு. ஆனால், விமானி ஆக விரும்புவோர் இந்த வேலை தொடர்பான முழு பின்னணியை அறிந்துகொள்ள வேண்டும்.

வேலைக்கான தகுதி: விமானியாகப் பணிபுரிய இயற்பியல், கணிதம் ஆகிய பாடங்கள் கொண்ட பிளஸ் 2 படிப்பில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த இரண்டு பாடங்களிலும் தலா ஐம்பது சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். வேறு பல தகுதிகளும் தேவை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow