எங்கே தவற விடுகிறோம்? - பெண்கள் நலம் | மனதின் ஓசை 7

இருபத்தியேழு வயதான செல்வி, அவர் குடும்பத்தில் முதல் பட்டதாரி. படிப்பு முடிந்த பிறகு ஒரு நல்ல நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கியவர் திருமணத்துக்குப் பிறகும் வேலைக்குச் சென்று வருகிறார்.

Jan 22, 2025 - 12:40
 0  3
எங்கே தவற விடுகிறோம்? - பெண்கள் நலம் | மனதின் ஓசை 7

இருபத்தியேழு வயதான செல்வி, அவர் குடும்பத்தில் முதல் பட்டதாரி. படிப்பு முடிந்த பிறகு ஒரு நல்ல நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கியவர் திருமணத்துக்குப் பிறகும் வேலைக்குச் சென்று வருகிறார். மூன்று வயதில் அவருக்கு ஒரு குழந்தையும் உண்டு. அன்பான கணவரும் ஓரளவுக்குப் புரிதல் உள்ள குடும்பத்தினரும் அமைந்திருந்தாலும், ஏதோ ஒரு மனக்கவலை அவரை வாட்டியது.

நடந்தது என்ன? - எந்த வேலையையும் ஈடுபாட்டுடன் செய்ய முடியாமலும் உடலில் சக்தி இல்லாதது போலவும் போதுமான தூக்கம் இல்லாதது போலவும் அவர் உணர்ந்தார். தன்னுடைய அன்றாடப் பணிகளைச் செய்வதே பெரும் போராட்டமாகவும் பெருமுயற்சி தேவைப்படும் விஷயமாகவும் அவருக்குத் தெரிந்தது. தனக்கு உதவி செய்ய யாரும் இல்லையே, தான் ஏன் வாழ வேண்டும் என்கிற நம்பிக்கையற்ற நிலையில் குழம்பிப்போயிருந்தார் அவர். குழந்தைக்காக எப்படியாவது இதிலிருந்து மீண்டு வரவேண்டும் என நினைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow