பதற்றத்தைத் தூண்டும் வேலைப்பளு

குமாருக்கு வயது 28. அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். அவருக்குத் திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. நன்றாக வேலை செய்துகொண்டிருந்தவரால், அண்மைக் காலமாகப் பணியில் சரியாகக் கவனம் செலுத்த முடியவில்லை.

Feb 26, 2025 - 12:15
 0  4
பதற்றத்தைத் தூண்டும் வேலைப்பளு

குமாருக்கு வயது 28. அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். அவருக்குத் திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. நன்றாக வேலை செய்துகொண்டிருந்தவரால், அண்மைக் காலமாகப் பணியில் சரியாகக் கவனம் செலுத்த முடியவில்லை. மனப் பதற்றம் இருப்பதாகச் சொன்னவர் இன்னும் சில பிரச்சினைகளைச் சந்தித்து வருவதாகவும் என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

பிரச்சினையைக் கண்டறிதல்: தனக்கு ஓர் இனம் புரியாத பயம், பதற்றம், கை கால்களில் நடுக்கம் அதிகமாக இருப்பதாகவும் அவர் சொன்னார். அதோடு இதயம் படபடவென்று அடிப்பது போலவும், தலைவலி, நெஞ்சு எரிச்சல் போன்ற தொல்லைகள் இருப்பதாக உணர்வதாகவும் கவலையாக விவரித்தார். முன் எப்போதும் இல்லாத அளவு அவருக்குக் கவனக்குறைவு, தூக்கமின்மை பிரச்சினைகளும் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow