பத்ம விருதுகள் முதல் குடியரசு தின விழா வரை: சேதி தெரியுமா? @ஜன. 21-27
தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா, கிரிக்கெட்டர் ரவிச்சந்திரன் அஸ்வின், தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்பட 113 பேருக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது.

ஜன.21: கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் மேற்கு வங்கள அரசு மேல்முறையீடு செய்தது.
ஜன.21: பாரிஸ் காலநிலை ஒப்பந்தம், உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். இதேபோல டாலருக்குப் பதில் புதிய கரன்சியைக் கொண்டு வர முயற்சித்தால் இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளின் பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும் என்றும் டொனால்டு ட்ரம்ப் மிரட்டல் விடுத்தார்.
What's Your Reaction?