பணவரத்து... கடகம் ராசிக்கான பிப்ரவரி மாத பலன்கள் முழுமையாக | 2025
பணவரத்து... கடகம் ராசிக்கான பிப்ரவரி மாத பலன்கள்: இந்த மாதம் நீண்ட நாட்களாக இருந்து வந்த தடைகள் நீங்கும். தனாதிபதி சூரியன் சஞ்சாரத்தால் எதிர்ப்புகள் விலகும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தது போல் இருக்கும்.

கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சூரியன், புதன் - அஷ்டம ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன், ராகு - லாப ஸ்தானத்தில் குரு (வ) - விரைய ஸ்தானத்தில் செவ்வாய்(வ) என கிரகநிலை உள்ளது.
கிரகமாற்றங்கள்: 05.02.2025 அன்று களத்திர ஸ்தானத்தில் இருந்து புதன் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 11.02.2025 அன்று லாப ஸ்தானத்தில் குரு வக்ரம் நிவர்த்தி ஆகிறார் | 12.02.2025 அன்று களத்திர ஸ்தானத்தில் இருந்து சூரியன் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 21.02.2025 அன்று அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் வக்ரம் நிவர்த்தி ஆகிறார் | 26.02.2025 அன்று ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து புதன் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
What's Your Reaction?