பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொடியேற்றம்

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழாவுக்காக இன்று (ஏப்.2) கொடியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து 10 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன.

Apr 2, 2025 - 21:05
 0  3
பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொடியேற்றம்

தேனி: சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழாவுக்காக இன்று (ஏப்.2) கொடியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து 10 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் அதிவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆராட்டு (சுவாமி புனித நீராடல்) நிகழ்ச்சி வரும் 11-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக நேற்று (ஏப்.1) மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. திருவிழா கொடியேற்றத்துக்கான கயறு, குதிரை சின்னம் பொறிக்கப்பட்ட கொடி உள்ளிட்டவை குளங்கா ஸ்ரீ தர்மசாஸ்தா கோயிலில் இருந்து அலங்கார ஊர்தியில் நேற்று மாலை சன்னிதானத்தை வந்தடைந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow