சென்னை 2-ம் கட்ட திட்டத்தில் இயக்கம், பராமரிப்பு பணி: டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ஏற்பு கடிதம்

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஏற்பு கடிதம் ரூ.5,870 கோடி மதிப்பில் டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கியுள்ளது.

Apr 2, 2025 - 20:05
 0  5
சென்னை 2-ம் கட்ட திட்டத்தில் இயக்கம், பராமரிப்பு பணி: டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ஏற்பு கடிதம்

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஏற்பு கடிதம் ரூ.5,870 கோடி மதிப்பில் டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கியுள்ளது.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மாதவரம் பால் பண்ணை - சிறுசேரி சிப்காட் வரை 3-வது வழித்தடம், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் வரை 4-வது வழித்தடம், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை 5-வது வழித்தடம் ஆகிய 3 வழித்தடங்கள் மற்றும் மாதவரம், பூந்தமல்லி, செம்மஞ்சேரியில் உள்ள பராமரிப்பு பணிமனைகள் உட்பட 118.9 கி.மீ. நீளத்துக்கு இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஏற்பு கடிதம் டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ரூ. 5,870 கோடி மதிப்பில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow