பகவத் கீதை முதல் ‘ஃபேவரிட்’ சமோசா வரை - சுனிதா வில்லியம்ஸ் சுவாரஸ்யங்கள்

இந்த காலகட்டத்தில் அவர் விண்வெளி மையத்தில் வீணாக பொழுதை கழிக்கவில்லை. விண்வெளி மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை கவனித்தார். இவரது 3 முறை பயணத்தில் இவர் 9 முறை விண்வெளி நடைபயணம் மேற்கொண்டார்.

Mar 20, 2025 - 18:30
 0  4
பகவத் கீதை முதல் ‘ஃபேவரிட்’ சமோசா வரை - சுனிதா வில்லியம்ஸ் சுவாரஸ்யங்கள்

மன வலிமை தந்த பகவத் கீதை: மூன்றாவது முறையாக சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் எதிர்பாராதவிதமாக 9 மாதங்கள் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த காலகட்டத்தில் அவர் விண்வெளி மையத்தில் வீணாக பொழுதை கழிக்கவில்லை. விண்வெளி மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை கவனித்தார். இவரது 3 முறை பயணத்தில் இவர் 9 முறை விண்வெளி நடைபயணம் மேற்கொண்டார்.

மொத்தம் 62 மணி நேரம் 6 நிமிடங்கள் இவர் விண்வெளி நடைபயணம் மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார். விண்வெளியில் நீண்ட காலம் தங்கிய பெண், நீண்ட நேரம் விண்வெளி நடைபயணம் மேற்கொண்ட பெண் என்ற சாதனைகளை இவர் படைத்துள்ளார். பகவத்கீதையை படித்ததால்தான் எனக்கு மனவலிமை கிடைத்தது என்றார் சுனிதா.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow