இஸ்ரேல் நகரங்களில் இடைவிடாது ஒலிக்கும் சைரன்: விடாப்பிடியாக தாக்கும் ஈரான்

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் 'போரை முடிவுக்குக் கொண்டுவருவோம்' என்ற எச்சரிக்கையை பொருட்படுத்தாமல்,  இஸ்ரேல் நகரங்கள் மீது ஈரான் புதிய ஏவுகணைத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இதனால் பல நகரங்களில் ஓயாமல் சைரன் சத்தங்கள் ஒலிக்கின்றன. ஜெருசலேமில் பயங்கர குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டன என ஊடகங்கள் தெரிவித்தன.

Jun 23, 2025 - 15:20
 0  6
இஸ்ரேல் நகரங்களில் இடைவிடாது ஒலிக்கும் சைரன்: விடாப்பிடியாக தாக்கும் ஈரான்

டெல் அவிவ்: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் 'போரை முடிவுக்குக் கொண்டுவருவோம்' என்ற எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், இஸ்ரேல் நகரங்கள் மீது ஈரான் புதிதாக ஏவுகணைத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இதனால் பல நகரங்களில் ஓயாமல் சைரன் சத்தங்கள் ஒலிக்கின்றன. ஜெருசலேமில் பயங்கர குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டன என ஊடகங்கள் தெரிவித்தன.

ஈரான் - இஸ்ரேல் இடையே 11-வது நாளாக மோதல் நீடிக்கும் நிலையில், இன்றும் ஈரானிலிருந்து ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரானின் ஏவுகணைகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், இஸ்ரேலின் பல்வேறு நகரங்களில் சைரன்கள் ஒலித்தன. இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ‘சிறிது நேரத்திற்கு முன்பு, ஈரானில் இருந்து இஸ்ரேல் நாட்டை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இஸ்ரேல் முழுவதும் ஜெருசலேம் உள்பட பல பகுதிகளில் சைரன்கள் ஒலித்தன" என்று தெரிவிக்கப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow