‘மாஸ்கோவில் வாழ முடியாது’ - தப்பிய சிரியா அதிபரிடம் விவாகரத்து கோரும் மனைவி

“மாஸ்கோவில் வாழ இயலாது. அதனால் எனக்கு விவாகரத்து வேண்டும். லண்டன் செல்ல சிறப்பு அனுமதி வேண்டும்.” என்று சிரியாவிலிருந்து வெளியேறிய முன்னாள் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் மனைவி அஸ்மா அல் ஆசாத் கோரியுள்ளார்.

Dec 23, 2024 - 15:30
 0  4
‘மாஸ்கோவில் வாழ முடியாது’ - தப்பிய சிரியா அதிபரிடம் விவாகரத்து கோரும் மனைவி

டமாஸ்கஸ்: “மாஸ்கோவில் வாழ இயலாது. அதனால் எனக்கு விவாகரத்து வேண்டும். லண்டன் செல்ல சிறப்பு அனுமதி வேண்டும்” என்று சிரியாவிலிருந்து வெளியேறிய முன்னாள் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் மனைவி அஸ்மா அல் ஆசாத் கோரியுள்ளார். ரஷ்ய நீதிமன்றத்தில் அவர் இது தொடர்பாக மனு தாக்கல் செய்துள்ளதாக அரபு மற்றும் துருக்கி நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

சிரி​யா​வில் அதிபராக இருந்த பஷார் அல் ஆசாத் அரசுக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு புரட்சி வெடித்​தது. ஆசாத் படைகளுக்​கும் கிளர்ச்சிப் படைகளுக்​கும் இடையே பல ஆண்டு​களாக போர் நடைபெற்​றது. இதில் சுமார் 5 லட்சம் பேர் உயிரிழந்தனர். இந்நிலை​யில், கடந்த நவம்பர் 27-ம் தேதி சிரியா ராணுவத்​துக்கு எதிராக மிகப்​பெரிய போரை துருக்கி ஆதரவு பெற்ற எச்டிஎஸ் கிளர்ச்​சிப் படை தொடங்​கியது. அதேநேரம், ஈரானும், ரஷ்யாவும் ஆதரவு தராததால் ஆசாத் தலைமையிலான சிரியா ராணுவம் பின்னடைவை சந்தித்​தது. இதனால் முக்கிய நகரங்களை கைப்​பற்றிய எச்டிஎஸ் வீரர்​கள், தலைநகர் டமாஸ்கஸை கடந்த 8-ம் தேதி கைப்​பற்றினர். இதையடுத்து, ஆசாத் ரஷ்யா​வுக்கு தப்பிச் சென்​றார். அவர் செல்வதற்கு முன்னதாகவே அவரது குடும்பத்தினர் அங்கு சென்றுவிட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow