வசிரிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதலுக்கு வழக்கம் போல் இந்தியா மீது குற்றம் சுமத்துகிறது பாகிஸ்தான்
பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள கைபர் பக்துன்குவா பகுதியில் நேற்று முன்தினம் ராணுவத்தினரின் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.

இஸ்லாமபாத்: பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள கைபர் பக்துன்குவா பகுதியில் நேற்று முன்தினம் ராணுவத்தினரின் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அவற்றின் மீது வெடிகுண்டுகள் ஏற்றிவந்த வாகனம் மோதியதில் பாக். ராணுவ வீரர்கள் 16 பேர் உயிரிழந்தனர்.
இத்தாக்குதலுக்கு தெக்ரிக் - இ-தலிபான் என்ற பாகிஸ்தான் தலிபான் அமைப்பின் தற்கொலைப்படை பிரிவான ஹபிஸ் குல் பகதூர் பொறுப்பேற்றது. ஆனால், பாகிஸ்தானின் ராணுவம் விடுத்துள்ள செய்தியில், ‘‘இந்தியாவின் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள், வெடிகுண்டு வாகனத்தை ராணுவத்தினர் வாகனங்கள் மீது மோதி தாக்குதல் நடத்தினர்’’ என தெரிவித்துள்ளது.
What's Your Reaction?