தானப் பத்திரம் ரத்து கோர வயதான பெற்றோருக்கு முழு உரிமை: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
வயதான காலத்தில் தங்களை கஷ்டப்பட வைக்காமல் மகனோ, மகளோ நன்றாக பார்த்துக்கொள்வார்கள் என்ற எண்ணத்தில் தான் பெற்றோர் சொத்துக்களை தானப்பத்திரமாக எழுதி கொடுக்கின்றனர். ஒருவேளை அவர்களின் நிபந்ததனையற்ற இந்த நோக்கம் நிறைவேறவில்லை என்றால் அதற்காக அந்த பத்திரத்தை ரத்து செய்யக்கோரி புகார் அளிக்க அவர்களுக்கு முழு உரிமை உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: “வயதான காலத்தில் தங்களை கஷ்டப்பட வைக்காமல் மகனோ, மகளோ நன்றாக பார்த்துக்கொள்வார்கள் என்ற எண்ணத்தில்தான் பெற்றோர் சொத்துகளை தானப் பத்திரமாக எழுதி கொடுக்கின்றனர். ஒருவேளை அவர்களின் நிபந்ததனையற்ற இந்த நோக்கம் நிறைவேறவில்லை என்றால், அதற்காக அந்தப் பத்திரத்தை ரத்து செய்யக் கோரி புகார் அளிக்க அவர்களுக்கு முழு உரிமை உள்ளது” என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த நாகலட்சுமி (90) தனது பெயரில் உள்ள சொத்துகளை தனது மகன் கேசவன் பெயருக்கு தானப் பத்திரம் எழுதி கொடுத்துள்ளார். ஆனால் மகனும், மருமகளும் தன்னை முறையாக கவனிக்கவில்லை என அவர் அளித்த புகாரின் பேரில், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் அந்த தானப் பத்திரத்தை ரத்து செய்து நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் கடந்த 2021-ம் ஆண்டு ஜன.25-ம் தேதி உத்தரவிட்டுள்ளார்.
What's Your Reaction?