“நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா முன்வர வேண்டும்” - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
முழுமையான மற்றும் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா முன்வர வேண்டும் என்று, உக்ரைன் அதிபர் விலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா - உக்ரைன் இடையே இன்று அமைதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கீவ்: முழுமையான மற்றும் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா முன்வர வேண்டும் என்று, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா - உக்ரைன் இடையே இன்று அமைதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நேட்டோவில் உக்ரைன் இணைய எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி அந்நாட்டுக்கு எதிராக ரஷ்யா, ராணுவ நடவடிக்கையை எடுக்கத் தொடங்கியது. ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளாக போர் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை நடைபெற்ற சமாதான முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை.
What's Your Reaction?