அமெரிக்காவின் கொலராடோவில் இஸ்ரேல் ஆதரவு பேரணியில் பதற்றம்: மக்கள் மீது தீ வைத்து எரிக்க முயற்சி
அமெரிக்காவின் கொலராடோவில், காசாவில் ஹமாஸ் பிடித்துவைத்துள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை நினைவுகூர கூடியிருந்த மக்கள் குழு மீது ஒரு நபர் திரவத்தை வீசி, அவர்கள் மீது தீயை பற்றவைத்துள்ளார். இதில் ஆறு பேர் காயமடைந்தனர்.

நியூயார்க்: அமெரிக்காவின் கொலராடோவில், காசாவில் ஹமாஸ் பிடித்துவைத்துள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை நினைவுகூர கூடியிருந்த மக்கள் குழு மீது ஒரு நபர் திரவத்தை வீசி, அவர்கள் மீது தீயை பற்றவைத்துள்ளார். இதில் ஆறு பேர் காயமடைந்தனர். இதுகுறித்து முகமது சப்ரி சோலிமான் எனும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலராடோவின் போல்டரில் காசாவில் உள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை நினைவுகூர நடத்தப்பட்ட பேரணியின் போது, ஒரு நபர் மக்கள் மீது திரவத்தை வீசி தீவைத்துள்ளார். இந்த சம்பவத்தின்போது அவர் "பாலஸ்தீனத்தை விடுவிப்போம்" என்று கத்திக்கொண்டே சென்றார்.
What's Your Reaction?