நாயகனாக அறிமுகமாகும் கோவிந்தாவின் மகன்

பாலிவுட்டின் பிரபல நடிகரான கோவிந்தாவின் மகன் யஷ்வர்தன் அகுஜா நாயகனாக அறிமுகமாக இருக்கிறார். இந்தி திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் கோவிந்தா.

Dec 21, 2024 - 15:40
 0  4
நாயகனாக அறிமுகமாகும் கோவிந்தாவின் மகன்

பாலிவுட்டின் பிரபல நடிகரான கோவிந்தாவின் மகன் யஷ்வர்தன் அகுஜா நாயகனாக அறிமுகமாக இருக்கிறார். இந்தி திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் கோவிந்தா. இவருடைய நடிப்பில் வெளியான காமெடி படங்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றவை. 2019-ம் ஆண்டுக்குப் பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டு, தொலைக்காட்சியில் நடுவராக பணிபுரிந்து வருகிறார்.

தற்போது அவருடைய மகன் யஷ்வர்தா அகுஜா நாயகனாக அறிமுகமாக இருக்கிறார். அப்படத்தினை தெலுங்கில் ‘பேபி’ படத்தின் மூலம் பிரபலமான சாய் ராஜேஷ் இயக்கவுள்ளார். இதனை மது மண்டேனா, அல்லு அரவிந்த் மற்றும் எஸ்கேஎன் பிலிம்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow