“நான் தவறு செய்யவில்லை, மன்னிப்புக் கேட்க மாட்டேன்!” - கன்னட மொழி சர்ச்சையில் கமல் திட்டவட்டம்

நான் தவறு செய்யாத போது என்னால் மன்னிப்புக்கேட்க முடியாது’ என்று   கன்னட மொழி சர்ச்சை விவகாரத்தில் நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

May 30, 2025 - 16:05
 0  4
“நான் தவறு செய்யவில்லை, மன்னிப்புக் கேட்க மாட்டேன்!” - கன்னட மொழி சர்ச்சையில் கமல் திட்டவட்டம்

சென்னை: ‘நான் தவறு செய்யாதபோது என்னால் மன்னிப்புக் கேட்க முடியாது’ என்று கன்னட மொழி சர்ச்சை விவகாரத்தில் நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கூறுகையில், “நான் தவறாக இருந்தால் மட்டுமே, மன்னிப்புக் கேட்பேன். நான் தவறு செய்யவில்லை. அதனால் மன்னிப்புக் கேட்கப்போவதும் இல்லை. இதுதான் என் வாழ்க்கை முறை. தயவுசெய்து அதைக் குழப்ப வேண்டாம். இந்தியா ஒரு ஜனநாயக நாடு, நான் சட்டத்தையும் நீதியையும் நம்புகிறேன். கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா மீதான எனது அன்பு உண்மையானது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow