கோவையில் விவசாயிகள் பயன்பெற நடமாடும் மண் பரிசோதனை வாகன சேவை தொடக்கம்
கோவை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன் பெறும் வகையில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்கீழ் புதிய நடமாடும் மண் பரிசோதனை நிலையத்துக்கான வாகனத்தை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் இன்று (மே 30) தொடங்கி வைத்தார்.

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்கீழ் புதிய நடமாடும் மண் பரிசோதனை நிலையத்துக்கான வாகனத்தை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் இன்று (மே 30) தொடங்கி வைத்தார்.
கோவை மாவட்டத்திலுள்ள விவசாயிகளின் பயன்பாட்டிற்காக கிராமங்கள் தோறும் மண் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்கீழ் புதிய நடமாடும் மண் பரிசோதனை நிலையத்திற்கான வாகனம் இன்று (மே 30) அறிமுகப்படுத்தப்பட்டது. கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
What's Your Reaction?