கொடைக்கானலில் நெய் மிளகாய் வரத்து குறைவு: 120 கிராம் ரூ.250க்கு விற்பனை
இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் கொண்டு வந்த ‘நெய் மிளகாய்’ திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், தாண்டிக் குடி, ஏற்காடு, ஊட்டி மலைப்பகுதி உள்ளிட்ட இடங்களில் சாகுபடி செய்யப்படுகிறது

கொடைக்கானலில் இலங்கை நெய் மிளகாய் ஆப் சீசன் என்பதால் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது. 120 கிராம் ரூ.250-க்கு விற்பனையாகிறது.
இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் கொண்டு வந்த ‘நெய் மிளகாய்’ திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், தாண்டிக்குடி, ஏற்காடு, ஊட்டி மலைப்பகுதி உள்ளிட்ட இடங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டு முழுவதும் இந்த சாகுபடி நடைபெறும். பம்பரம் போன்று தோற்றமளிக்கும் இந்த மிளகாய், நாட்டு மிளகாயை விட காரம் அதிகம் கொண்டது. ஒரு மிளகாய் அதிகபட்சம் 10 கிராம் வரை எடை இருக்கும்.
What's Your Reaction?