நயன்தாராவுக்கு ஆதரவு அளித்தது ஏன்? - நடிகை பார்வதி விளக்கம்

“சுற்றியுள்ளவர்களின் ஆதரவு கிடைக்காத போது எப்படி இருக்கும் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். ஒரு நிலைப்பாட்டை எடுக்கவும், அது தொடர்பாக ஆதரவளிக்கவும் எனக்கு நீண்ட நேரம் தேவையில்லை” என நயன்தாராவுக்கு ஆதரவளித்தது குறித்து நடிகை பார்வதி திருவொத்து தெரிவித்துள்ளார். 

Nov 23, 2024 - 19:10
 0  3
நயன்தாராவுக்கு ஆதரவு அளித்தது ஏன்? - நடிகை பார்வதி விளக்கம்

சென்னை: “சுற்றியுள்ளவர்களின் ஆதரவு கிடைக்காதபோது எப்படி இருக்கும் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். ஒரு நிலைப்பாட்டை எடுக்கவும், அது தொடர்பாக ஆதரவளிக்கவும் எனக்கு நீண்ட நேரம் தேவையில்லை” என நயன்தாராவுக்கு ஆதரவளித்தது குறித்து நடிகை பார்வதி திருவொத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், “சுற்றியுள்ளவர்களின் ஆதரவு கிடைக்காத போது எப்படி இருக்கும் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். ஒரு நிலைப்பாட்டை எடுக்கவும், அது தொடர்பாக ஆதரவளிக்கவும் எனக்கு நீண்ட நேரம் தேவையில்லை. நயன்தாராவின் பதிவைப் பார்த்த உடனே அதனை பகிர வேண்டும் என தோன்றியது பகிர்ந்தேன். சுயமாக வளர்ந்தவர் நயன்தாரா. தன்னுடைய கரியரை தானே உருவாக்கி கொண்ட லேடி சூப்பர் ஸ்டாரே இப்படியான ஒரு பகிரங்கமான கடிதத்தை காரணமில்லாமல் எழுத வாய்ப்பில்லை. அவரைப் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். அவர் எதிர்கொண்ட அனுபவங்களை 3 பக்கங்களாக எழுதியுள்ளார். அதனால்தான் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow